Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விராலிமலை அம்மன் கோயில் மார்கழி மாத மகா விளக்குப் பூஜை: 4,004 பெண்கள் பங்கேற்பு!

01:35 PM Dec 19, 2023 IST | Web Editor
Advertisement

விராலிமலை அம்மன் கோயிலில் 4004 பெண்கள் பங்கேற்ற மார்கழி மாத மகா விளக்குப் பூஜையை ஜோதிமணி எம்பி தொடங்கி வைத்தார்.

Advertisement

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில் பிரசித்தி பெற்ற தலமாகும். சுற்றுப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும்,  குலதெய்வமாகவும் விளங்கும் அம்மன் கோயிலில் வருடம் முழுவதும் பல்வேறு விழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.  அதேபோல மார்கழி மாதம் முழுவதும் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை நடைபெறும் 34ம் ஆண்டு திருவிளக்கு பூஜை இன்று டிச.19 அதிகாலை தொடங்கியது.

இப்பூஜை வரும் தை மாதம் 1ம் தேதி நிறைவடைகிறது.  மொத்தம் ஒன்பது விளக்குப் பூஜையின் முதலாவது திருவிளக்கு பூஜை கோமாதா பூஜையுடன் தொடங்கியது.  இதில் 4004 பெண்கள் பங்கேற்று,  அம்மன் பக்தி பாடல்களைப் பாடி விளக்குப் பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டனர்.  இதில் பங்கேற்ற எம்பி ஜோதிமணி பெண்களுடன் தரையில் அமர்ந்து விளக்குப் பூஜை செய்து வழிபட்டார்.

விழா நாள்களில் அம்மன் வெள்ளிக் கவசம் அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை குருக்கள் சுந்தரம் சுவாமிகள் தலைமையில் அய்யப்பா சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.

Tags :
BakthiMeikkannudayal Amman TempleNews7Tamilnews7TamilUpdatesPudukottaiviralimalai
Advertisement
Next Article