Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மார்ச் 01 முதல் சத்தீஸ்கரில் கிறிஸ்தவர்களைக் கொல்வதாக RSS / VHP உறுப்பினர்கள் சபதம் எடுத்ததாக வைரலாகும் வீடியோ - உண்மை என்ன?

விஸ்வ இந்து பரிஷத் (VHP) மற்றும் RSS உறுப்பினர்கள் 2025 மார்ச் 01 முதல் சத்தீஸ்கரில் கிறிஸ்தவர்களைக் கொல்ல வேண்டும் சபதம் எடுப்பதாகக் கூறும் கூற்றுகளுடன் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
09:05 PM Feb 20, 2025 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by 'FACTLY

Advertisement

பஜ்ரங்தள் அமைப்பின் டி-சர்ட் அணிந்து திரிசூலம் போன்ற ஆயுதங்களை ஏந்திய ஒரு குழு ஆண்கள் சத்தியப்பிரமாணம் செய்வதைக் காட்டும் ஒரு காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதனை ( இங்கே , இங்கே , மற்றும் இங்கே காணலாம்). விஸ்வ இந்து பரிஷத் (VHP) மற்றும் RSS உறுப்பினர்கள் 2025 மார்ச் 01 முதல் சத்தீஸ்கரில் கிறிஸ்தவர்களைக் கொல்ல வேண்டும் சபதம் எடுப்பதாகக் கூறும் கூற்றுகளுடன் இந்தப் பதிவு பகிரப்படுகிறது. இந்தக் கட்டுரையின் மூலம் பதிவில் கூறப்பட்டுள்ள கூற்றைச் சரிபார்ப்போம்.

உண்மை சரிபார்ப்பு : 

வைரல் கூற்றை சரிபார்க்க, தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி இணையத்தில் தேடலை மேற்கொண்டோம். இருப்பினும், மார்ச் 01, 2025 முதல் இந்தியாவின் சத்தீஸ்கரில் கிறிஸ்தவர்களைக் கொல்வதாக VHP & RSS உறுப்பினர்கள் சபதம் எடுத்ததாக எந்தவொரு சம்பவத்தையும் உறுதிப்படுத்தும் நம்பகமான அறிக்கைகள் எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அத்தகைய சம்பவத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அது கணிசமான ஊடக செய்திகளை ஈர்த்திருக்கும், ஆனால் அத்தகைய அறிக்கைகள் எதுவும் கிடைக்கவில்லை.

வைரலான காணொளியை நாங்கள் ஆய்வு செய்தபோது, ​​தெலுங்கில் பெயர் எழுதப்பட்ட பஜ்ரங் தள டி-சர்ட்டை அந்த நபர்கள் அணிந்திருப்பதைக் கண்டோம். இந்த உறுப்பினர்கள் இந்து மதம், அதன் மதிப்புகள் மற்றும் அதன் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதாக தெலுங்கில் சத்தியம் செய்வதைக் காண முடிந்தது. எந்தவொரு அச்சுறுத்தலிலிருந்தும் நம்பிக்கையையும் தேசத்தையும் பாதுகாப்பதாகவும், இந்து ஒற்றுமையை ஆதரிப்பதாகவும், சமூகத்தைப் பாதுகாப்பதாகவும் அவர்கள் உறுதியளித்தனர். இந்த வீடியோவில் எங்கும் கிறிஸ்தவர்களையோ அல்லது வேறு எந்த மதத்தையோ குறிப்பிடவில்லை.

தொடர்புடைய தெலுங்கு முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தியதில், பஜ்ரங்தள் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்த பல சம்பவங்களைக் கண்டறிந்தோம், எடுத்துக்காட்டாக, பிப்ரவரி 19, 2023 அன்று நிஜாமாபாத்தில் 400 இந்து ஆண்களுக்கு திரிசூலங்களை விநியோகித்தது உறுதிமொழி எடுத்தது ( இங்கே ) மற்றும் பிப்ரவரி 11, 2024 அன்று கம்மத்தில் நடந்த 'திரிசூல தீட்சா நிகழ்ச்சி' ( இங்கே மற்றும் இங்கே ) ஆகியவை நடைபெற்றது.  இருப்பினும், இவற்றில் எதுவும் வைரலான வீடியோவுடன் பொருந்தவில்லை.

சத்தீஸ்கரில் சமீபத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததா என்று இணையத்தில் தேடியபோது, ​​டைனிக் பாஸ்கரின் அறிக்கை கிடைத்தது. அந்த அறிக்கையின்படி , 2024 நவம்பர் 27 அன்று ராஜ்நந்கானில் விஹெச்பி மற்றும் பஜ்ரங்தளத்தால் ஒரு பிரமாண்டமான திரிசூல் தீட்சை ஏற்பாடு செய்யப்பட இருந்தது, அதில் பங்கேற்பாளர்கள் நாடு, மதம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதாக உறுதிமொழி எடுக்க வேண்டும். இருப்பினும், வைரலான வீடியோவுடன் பொருந்தக்கூடிய எந்த காட்சிகளும் எங்களுக்குக் கிடைக்கவில்லை, மேலும் அறிக்கைகளில் எங்கும் கிறிஸ்தவர்களைக் கொல்ல சத்தியம் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படவில்லை.

வைரல் காணொளியின் கீஃப்ரேம்களை ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தியபோது டிசம்பர் 27, 2024 தேதியிட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவு எங்களுக்குக் கிடைத்தது, அந்த இடுகையில் அதே காணொலி இடம்பெற்றுள்ளது , அந்த காணொலி சமீபத்தியது அல்ல, பிப்ரவரி 2025 இல் எடுக்கப்பட்டதல்ல என்பதை உறுதிப்படுத்தியது.

 

முடிவு : 

விஸ்வ இந்து பரிஷத் (VHP) மற்றும் RSS உறுப்பினர்கள் 2025 மார்ச் 01 முதல் சத்தீஸ்கரில் கிறிஸ்தவர்களைக் கொல்ல வேண்டும் சபதம் எடுப்பதாகக் கூறும் கூற்றுகளுடன் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. வைரல் காணொலியை ஆய்வு செய்ததில் அப்படி சாட்சியம் எடுக்கவில்லை பழைய வீடியோ தவறான கூற்றுடன் வைரலாகி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

Note : This story was originally published by ‘'FACTLY’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
தவறான செய்திபஜ்ரங்தள்சத்திய சரிபார்ப்புChattisgharMarch 01RSSVHPviral video
Advertisement
Next Article