Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

400ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பூ என வைரலாகும் பதிவு - Fact Check

09:55 AM Dec 31, 2024 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by ‘FACTLY

Advertisement

நானூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் மஹாமேரு மலர் என்று கூறப்படும் ஒரு பூவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து உண்மைத் தன்மையை விரிவாக ஆய்வு செய்வோம்.

நானூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் மஹாமேரு மலர் என்று கூறப்படும் ஒரு பூவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய ஃபேக்ட்லி உண்மை சரிபார்ப்பு செய்தி ஊடகம் முயற்சி செய்தத. அதுகுறித்து விரிவாக காணலாம்.

உண்மை சரிபார்ப்பு :

முதலில் சமூக வலைதளங்களில் வைரலான புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலை மேற்கொண்டபோது, ​​புகைப்படத்தில் உள்ள பூவின் பெயர் '  Protea Cynoroides' அல்லது 
'King Protea' என கண்டறியப்பட்டது . இது தென்னாப்பிரிக்காவின் தேசிய மலர் எனவும் தெரிய வந்தது.

சமூக வலைதளங்களில் வைரலான புகைப்படத்தில் கிங்  புரோட்டியாவின் மொட்டு உள்ளது . பல்வேறு தாவரவியல் வலைத்தளங்களின்படி இந்த மலர் ஆண்டு முழுவதும், குறிப்பாக கோடையில் பூக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உலகின் மிக மெதுவாக பூக்கும் மலர் '  புயா ரைமண்டி' என்று கின்னஸ் உலக சாதனையில்  இடம் பெற்றுள்ளது . இந்த மலர் 80-150 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும். 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பூ என்று ஒன்று உலகிலேயே இல்லை என்று  தாவரவியலாளர்கள்  கூறுகின்றனர் .

கடந்த காலங்களில் மஹாமேரு மலர் புகைப்படங்கள் என பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட போது Factly எழுதிய உண்மை சரிபார்ப்பு கட்டுரைகளை இங்கே காணலாம் .

முடிவு :

நானூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் மஹாமேரு மலர் என்று கூறப்படும் ஒரு பூவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை ஆய்வு செய்ததில் வைரலாகும் புகைப்படத்தில் உள்ள மலர் ஆண்டு முழுவதும் பூக்கும் கிங் புரோட்டீயா என்றும் இது தென்னாப்பிரிக்காவின் தேசிய மலர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

Note : This story was originally published by ‘FACTLY and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
'King Protea'400 yearsflowerMahameruProtea Cynoroides
Advertisement
Next Article