இஸ்ரேல் தாக்குதலால் சிதிலமடைந்த பாலஸ்தீனத்தின் பகுதிகள் என வைரலாகும் படங்கள் - Fact Check
This News Fact Checked by ‘India Today’
ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே ஒரு வருடத்திற்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் பாலஸ்தீனத்தின் காசா மற்றும் ரஃபா உள்ளிட்ட மிக முக்கியமான பகுதிகள் இடிபாடுகளாக மாற்றியுள்ளன. பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன. இந்த போரில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ பாலஸ்தீனத்தைச் சேர்ந்தது அல்ல. மாறாக, இது சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸின் காட்சியைக் காட்டுகிறது என இந்தியா டுடே கண்டறிந்துள்ளது. வைரலான வீடியோவை உன்னிப்பாகப் பார்த்தால், ஈராக்கின் குர்திஸ்தானைத் தளமாகக் கொண்ட ஊடகமான குர்திஸ்தான்24 இன் லோகோவைப் பார்க்க முடியும். அதுகுறித்த ஆதாரத்தை மேலும் தேடியபோது, இந்த ஆண்டு ஜனவரி 3 அன்று குர்திஸ்தான் 24 இன் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் அதே வீடியோவைக் கண்டோம். குர்திஷ் மொழியில் எழுதப்பட்ட தலைப்பின்படி, வீடியோ சிரியா தலைநகர் டமாஸ்கஸின் தெற்கு பகுதியில் எடுக்கப்பட்டது. நீண்ட கால யுத்தம் காரணமாக, ஒரு சில பள்ளிவாசல்களைத் தவிர முழுப் பகுதியும் இடிபாடுகளாக மாறிவிட்டன.
அதன் பிறகு, இதைப் பற்றிய ஒரு சிறிய வீடியோவை ஜெர்மன் சார்ந்த ஊடகமான DW News அல்லது Deutsche Welle News இன் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் காணலாம். நீங்கள் அதை உன்னிப்பாகக் கவனித்தால், வீடியோ காட்சிகள் மற்றும் திரை விகிதங்கள் இரண்டும் வேறுபட்டாலும், வீடியோக்களின் காட்சிகளில் இடம்பெற்ற பிரேம்கள் ஒரே மாதிரியாக இருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள்.
டியூச் வெல்லே நியூஸ் காணொளியின்படி, ஆளில்லா விமானக் காட்சிகள் பல வருடப் போருக்குப் பிறகு சிரியாவின் டமாஸ்கஸில் அழிவின் அளவைக் காட்டுகிறது "இது சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸின் தெற்குப் பகுதியில் ஜனவரி 2, 2025 அன்று ட்ரோனில் இருந்து எடுக்கப்பட்டது. சிரிய அரசாங்கப் படைகள், கிளர்ச்சிக் குழுக்கள் மற்றும் இஸ்லாமிய தேச போராளிகளுக்கு இடையிலான கடுமையான குண்டுவீச்சு மற்றும் மோதல்களால் இப்பகுதி இடிபாடுகளாக மாறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜனவரி 6, 2025 அன்று, கத்தாரை தளமாகக் கொண்ட அல் ஜசீரா ஆங்கில செய்தி ஊடகத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் விரிவான வீடியோ அறிக்கை கிடைத்தது. "டமாஸ்கஸில் போரினால் பாதிக்கப்பட்ட அல்-அசாலி சுற்றுப்புறத்தை மீண்டும் கட்டியெழுப்ப சிரியர்கள் திரும்புகிறார்கள்" என்ற தலைப்பில் வெளியானது. இவற்றில் வைரல் வீடியோவுடன் பொருந்தக்கூடிய மசூதிகளுடன் ஒரே மாதிரியான பிரேம்களைக் கொண்டுள்ளது. சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸுக்கு தெற்கே உள்ள அல் அசலி நகரமே இந்த வீடியோவில் இடம்பெற்றதாக செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.
முடிவு :
இஸ்ரேலின் தாக்குதளுக்குள்ளான பாலஸ்தீனத்தின் சிதிலமடைந்த பகுதிகள் என படங்கள் வைரலாகின. இதுகுறித்து ஆய்வுக்கு உட்படுத்தியதில் அவை சிரியாவில் உள்ள அல் அசலி நகரத்தின் காட்சிகள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
Note : This story was originally published by ‘India Today’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.