Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது" - #Kanimozhi எம்.பி. எக்ஸ் தளத்தில் பதிவு!

04:00 PM Nov 25, 2024 IST | Web Editor
Advertisement

வீடு தொடங்கி வீதி வரை சமூகத்தின் எல்லா தளங்களிலும் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

Advertisement

டொமினிக்கன் குடியரசில் கடந்த 1960 நவம்பர் 25ல் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர் ராபீல் ருஜிலோவின் உத்தரவின் பேரில் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் பாதிக்கப்படும் பெண்களுக்கெதிராகவே குரல் கொடுத்தவர்கள் என்று கூறப்படுகிறது. பின்னர் இந்த சகோதரிகள் லத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் கொடுமையின் சின்னமாக மாறினார்கள்.

கடந்த 1980ம் ஆண்டு முதல் அந்தத் தினம் அவர்களின் படுகொலையை நினைவு கூறுவதற்காகவும், பால்நிலை வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் தெரிவுசெய்யப்பட்டது. அன்றைய தினத்தைத் தொடர்ந்து 16 நாட்களுக்கு பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உலகளாவிய ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தச் செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ம் தேதி முடிவடையும்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17ம் தேதி கூடிய போது ஆண்டுதோறும் நவம்பர் 25ம் தேதியை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி, ஆண்டுதோறும் நவ.25ம் தேதி பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினமான அனுசரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திமுக எம்.பி. கனிமொழி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

"பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால், ஒருபோதும் விடுதலை அடைய முடியாது. ஆண்களுக்கு நிகராய் சமூக அடுக்கின் அத்தனை படிநிலைகளையும் தனது அறிவால், உழைப்பால் கட்டியமைத்தவர்கள் பெண்கள். ஆனால், வீடு தொடங்கி வீதி வரை சமூகத்தின் எல்லா தளங்களிலும் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினமான இன்று, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்போம் என்றும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியேற்போம்"

இவ்வாறு திமுக எம்.பி. கனிமொழி பதிவிட்டுள்ளார்.

Tags :
DMKKanimozhi KarunanidhiKanimozhi MPnews7 tamil
Advertisement
Next Article