Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பக்கிங்காம் கால்வாயில் மூழ்கிய 3 சகோதரர்களும் சடலமாக மீட்பு... #Viluppuram-ல் சோகம்!

07:49 AM Dec 24, 2024 IST | Web Editor
Advertisement

விழுப்புரம் அருகே பக்கிங்காம் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட சகோதரர்கள் மூவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Advertisement

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்தை தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவருக்கு லோகேஷ்(24), இரட்டை சகோதர்களான விக்ரம்(23), சூர்யா(23) ஆகிய 3 சகோதரர்கள் இருந்தனர். கணேசனின் மகன்கள் மூன்று பேரும் நேற்று முன்தினம் மாலை கடல் முகத்துவாரப் பகுதியான பக்கிங்காம் கால்வாயில் மீன் பிடிக்க சென்றனர்.

அங்கு அவர்கள் 3 பேரும் கால்வாய் மேம்பாலத்தின் மீது அமர்ந்து மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக லோகேஷ் கால்வாயில் தவறி விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற இருவரும், அண்ணனைக் காப்பாற்ற கால்வாயில் குதித்தனர். இதில் சகோதரர்கள் 3 பேரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். தகவலறிந்தது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் மாயமான 3 சகோதர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

24 மணி நேர போராடத்துக்கு பிறகு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூவரின் உடல்களும் மீட்கப்பட்டன. போலீசார் அவர்களின் உடல்களை புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் 3 சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Next Article