Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தில் மின்வெட்டை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்!

11:15 AM Oct 25, 2023 IST | Web Editor
Advertisement

புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட கோட்டகுப்பம் நகராட்சி பகுதிகளில் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

புதுச்சேரியை ஒட்டியுள்ள விழுப்புரம் மாவட்டத்தின் கோட்டகுப்பத்தில் 5000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.  இப்பகுதியில்  அடிக்கடி மின்வெட்டு நிலவுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒரு நாளைக்கு சுமார் 4 முதல் 5 மணி நேரம் வரை மின்விநியோகம் தடைபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள், வியாபாரிகள், நோயாளிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பிரச்னையானது நிலவுவதாகவும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு புகார்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மின்வெட்டை கண்டித்தும் கோட்டகுப்பத்திற்கு உட்பட்ட பகுதியில் துணை மின் நிலையம் அமைத்து தரக்கோரியும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதன்பிறகும் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனில் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

முழு செய்தியை காணொளியாக காண:  

Advertisement
Next Article