Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விழுப்புரம் | அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் #MKStalin திடீர் ஆய்வு!

விழுப்புரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
07:40 PM Jan 27, 2025 IST | Web Editor
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வின்போது முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். அதன்படி, முதலமச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று மாலை விழுப்புரம் வந்தடைந்தார்.

Advertisement

முன்னதாக சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான ஓங்கூர் சுங்கச்சாவடி அருகில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் பொன்முடி வரவேற்பு அளித்தார். இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒலக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு திண்டிவனம் நகரில் சென்னை சாலையில் மேம்பாலம் வழியாக ஜே.வி.எஸ். திருமண மண்டபம் வரை ரோடு ஷோ நடத்தினார். அங்கு முதலமைச்சர் பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் அந்த திருமண மண்டபத்தில் நடைபெறும் விழுப்புரம் வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி சிறப்புரையாற்றுகிறார்.

பின்னர் திண்டிவனத்தில் இருந்து காரில் புறப்பட்டு விழுப்புரம் வருகிறார். அங்கு மாவட்ட அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்குகிறார். நாளை (ஜன.28) காலை 10 மணியளவில் விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகே ரூ.4 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மறைந்த ஏ.கோவிந்தசாமியின் நினைவு அரங்கம் மற்றும் இட ஒதுக்கீடு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த 21 சமூக போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் ரூ. 5.70 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

Advertisement
Next Article