2023-ல் ரசிகர்களிடையே அதிகம் கவனம் பெற்ற தமிழ் சினிமாவின் வில்லன்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
2023 ஆம் ஆண்டு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. பல முக்கிய நிகழ்வுகளை இந்த ஆண்டு மக்கள் சந்தித்துள்ளனர். அரசியல், சினிமா , பொருளாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்த முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டு ஏராளமாக நடந்துள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்பட்ட வில்லன்கள் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.
மாமன்னன் - ரத்னவேல்
வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'மாமன்னன்'. இப்படத்தில் நடிகர் ஃபகத் ஃபாசில், ‘ரத்னவேல்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டது.
போர்தொழில் - கென்னடிசரத்குமார், அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'போர்தொழில்'. இப்படத்தில் மெயின் வில்லனாக இல்லை என்றாலும், நெகடிவ் கதாபாத்திரத்தில் மறைந்த நடிகர் சரத்பாபு நடித்திருப்பார். சரத்பாபுவின் ’கென்னடி’ கதாபாத்திரம் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது.
மாவீரன் - ஜெயக்கொடிசிவகார்த்திகேயன், யோகி பாபு, ஆதிதி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'மாவீரன்'. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குநர், நடிகர் மிஷ்கின் ‘ஜெயக்கொடி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மிஷ்கினின் வில்லன் நடிப்பு ரசிகர்களுக்கு வழக்கம்போல விருந்து படைத்தது.
ஜவான் - காள
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படம் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது. இப்படம் வசூலில் 1,000 கோடி ரூபாயை தாண்டியது. இதில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி, ‘காளி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருப்பார்.ஜெயிலர் - வர்மன்‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான படம் 'ஜெயிலர்'. இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக மலையாள நடிகர் விநாயகன், ‘வர்மன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ‘வர்மன்’ கதாபாத்திரம் சமூக வலைதளத்தில் ஊடுருவி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
மார்க் ஆன்டனி - ஜாக்கி பாண்டியன்விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ‘ஜாக்கி பாண்டியன், மதன் பாண்டியன்’ என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்தார். எஸ்.ஜே.சூர்யாவின் வசனங்கள் இன்று வரை சமூக வலைதளங்களில் வலம் வரும் வகையில், அவர் நடித்த கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்துள்ளது.