Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கொடைக்கானல் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மலை கிராம மக்கள்...

04:34 PM Nov 10, 2023 IST | Web Editor
Advertisement

கொடைக்கானலில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில்,  மலை கிராம மக்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

Advertisement

வடகிழக்கு பருவநிலை தீவிரமடைந்துள்ள நிலையில்,  கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  கொடைக்கானலில் உள்ள கடைகோடி கிராமங்களான சின்னூர்,  சின்னூர் காலனி,  பெரியூர்,  கடைப்பாரைக்குழி
உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிக்க, கல்லாறு என்ற ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும்.

கொடைக்கானலில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் கனமழையால் கல்லாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக 100க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கக் கூடிய கிராமங்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதி தடைப்பட்ட நிலையில் உள்ளது.

இதையும் படியுங்கள்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் பிரதீப் ஆண்டனி?

கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் பள்ளிகளில் படிக்கும் தங்களது குழந்தைகளை அழைத்து வருவதற்காக கயிறுகளை கட்டி ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து வருகின்றனர். காட்டாற்று வெள்ளத்தால் மலை கிராம மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

Tags :
heavyrainskodaikanalNortheastMonsoonPeopleRainTransporttravel
Advertisement
Next Article