Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விக்கிரவாண்டி | தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து யுகேஜி மாணவி உயிரிழப்பு!

04:44 PM Jan 03, 2025 IST | Web Editor
Advertisement

விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து 5 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து 5 வயதுடைய யுகேஜி மாணவி உயிரிழந்துள்ளார். பள்ளி இடைவேளையின் போது வெளியே சென்ற மாணவி லியா லட்சுமி, மீண்டும் வகுப்பறைக்கு வராததால் பல்வேறு இடங்களில் ஆசிரியர்கள் தேடியுள்ளனர். பின்னர் பள்ளி கழிவுநீர் தொட்டியில் லியா விழுந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கழிவுநீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி லியா லட்சுமியின் உடல், பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 5 வயதுள்ள யுகேஜி மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்கு பின்புறத்தில் மைதானத்திற்கு செல்லும் வழியில் உள்ள கழிவுநீர் தொட்டி மூடப்படாமல், பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்ததாக பள்ளி நிர்வாகத்தினர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags :
private schoolseptic tankUKG StudentViluppuram
Advertisement
Next Article