ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பரப்புரை மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் சி.அன்புமணி ஆகியோர் போட்டியில் உள்ளனர். இதனையொட்டி அரசியல் கட்சியினர் இறுதிக்கட்டமாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள் : சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு! உதகை சிறப்பு மலை ரயில் சேவை ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீட்டிப்பு!
இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலையுடன் பரப்புரை நிறைவடைந்தது. வாக்குப்பதிவு வரும் 10ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மாலை 6 மணிக்கு பிறகு வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.