Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - திமுகவிற்கு மஜக ஆதரவு!

01:58 PM Jun 23, 2024 IST | Web Editor
Advertisement

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட கடந்த 14-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில் 21-ம் தேதியுடன் நிறைவடைந்தது. மொத்தம் 64 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் வேட்மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இதில் 2022 ஜூலை 12-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் தாயார் கே.பி.செல்வி (40), கணவர் ராமலிங்கத்துடன் வந்து தேர்தல் நடத்தும் அலுவலரான மு.சந்திரசேகரிடம் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். பின்னர், தனது குழந்தைக்கு ஏற்பட்ட கஷ்டம் மற்ற குழந்தைகளுக்கு ஏற்படக் கூடாது என்பதற்காகத் தான் தேர்தலில் போட்டியிடுவதாக செல்வி தெரிவித்தார்.

இதுபோல், தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் எம்.எஸ்.ஆறுமுகம் (58), வெள்ளை சேலை அணிந் வந்தும், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த அகிம்சா சோஷலிஸ்ட் கட்சியின் தி.ரமேஷ், காந்தியவாதி போன்று வேடம் அணிந்து வந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (ஜூன் 24) நடைபெறும். மனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 26 பிற்பகல் 3 மணி வரை கால அவகாசம் உள்ளதால், அதன் பிறகு வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். தொடா்ந்து, ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி  சார்பில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.  அக்கட்சியின் மாநில செயலாளர்கள் ஷஃபி, இப்ராஹிம் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்படுவதாக மஜக தலைவர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.

Tags :
DMKMJKTamilNaduThamimum Ansarivikravandi
Advertisement
Next Article