Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாமக வேட்பாளர் சி.அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!

03:09 PM Jun 19, 2024 IST | Web Editor
Advertisement

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாமக வேட்பாளர் சி. அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தார்.

Advertisement

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார்.  இதனை தொடர்ந்து அங்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

வேட்புமனு தாக்கல் கடந்த 14 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  வேட்பு மனு தாக்கல் 21 ஆம் தேதி உடன் நிறைவு பெறுகிறது.  இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக திமுக நாம்தமிழர் கட்சி என முக்கிய 3 கட்சிகள் போட்டியிடுகின்றன.  வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நாளிலிருந்து சுயேட்சை வேட்பாளர்கள் 9 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதன்படி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாமக வேட்பாளர் சி. அன்புமணி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.  தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பாமக வேட்பாளர் சி.அன்புமணி வேட்புமனுவை தாக்கல் செய்தார்.  அவருடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
by electionElection2024nominationPMKvikravandi
Advertisement
Next Article