“விஜய்-இன் அரசியல் வருகை நன்றாக இருக்கும்!” - இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்
விஜய்-இன் அரசியல் வருகை நன்றாக இருக்கும் என இயக்குநர் கௌதம் மேனன் கூறியுள்ளார்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், வருண் நடித்துள்ள ஜோஷ்வா திரைப்படம் மார்ச் 1ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் சென்னை பிரசாத் லேபில் நாயகன் வருண், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
என்னுடைய 19 வது திரைப்படமான ஜோஷ்வா, வருகிற மார்ச் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன். கொரோனா காரணமாக திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. இடையில் கதாநாயகிக்கு திருமணம் நடந்துவிட்டது. பின்னர் வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிறகு இப்படத்தை வெளியிட முடிவு செய்தோம் என்றார்.
மேலும் விஜய்யின் அரசியல் வருகை எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு நன்றாக இருக்கும் என்றார். துருவ நட்சத்திரம் எப்போது ரிலீஸ் என்ற கேள்விக்கு வரும் துருவம் வரும் என்று பதிலளித்தார். த்ரிஷா பற்றிய கேள்விக்கு யாரை பற்றி பேசியிருந்தாலும் தப்புதான் என்றார்.
ரீ ரிலீஸ் கலாச்சாரம் ரொம்ப நல்ல விஷயம். நாங்கள் இருக்கிறோம் என்று உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறது. வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என்ற கேள்விக்கு மிகவும் சர்ச்சையான கேள்வி இது எப்போது ஹீரோவும் தயாரிப்பாளரும் ஒன்றாகிறார்களோ அப்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் பண்ணுவேன். இவ்வாறு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறினார்.