Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஓடிடியில் வெளியானது விஜய்யின் ‘#GOAT’ - Director's Cut குறித்து வெங்கட் பிரபு விளக்கம்!

10:44 AM Oct 03, 2024 IST | Web Editor
Advertisement

ஓடிடியில் நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம் வெளியானது. ஆனால் டைரக்டர்ஸ் கட் வெர்ஷன் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அது வெளியாகவில்லை. இதுகுறித்து இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

விஜய்யின் அரசியல் வருகைக்கு பின், திரைக்கு வந்த படம் ‘தி கோட்’. லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு  இயக்கினார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த செப்.5-ம் தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.440 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. படம் வெளியாகி ஒருமாதம் கூட ஆகாத நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியானது. நீளம் கருதி படத்தில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து காட்சிகளும் ஓடிடியில் வெளியாகும் என முன்னர் இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்திருந்தார்.

மேலும் நெட் ஃபிளிக்ஸில் டைரக்டர்ஸ் கட் வெர்ஷன் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அது வெளியாகவில்லை. இந்நிலையில் இதுகுறித்து இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;

“The GOAT' படத்தின் Director's Cut-க்கு VFX, இறுதிக்கட்ட பணிகள் இன்னும் முடியவில்லை. தயாரிப்பாளருடன் கலந்து பேசி, அந்த காட்சிகளை Deleted Scenes அல்லது Extended Cut ஆக வெளியிட திட்டமிட்டிருக்கிறேன். தற்போது இந்த version-ஐ கண்டுகளியுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Directors CutNetflixvenkat prabhuvijay
Advertisement
Next Article