Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“திமுக மீதான விஜய்யின் குற்றச்சாட்டு பிசுபிசுத்து போகும்” - அமைச்சர் ரகுபதி!

01:11 PM Nov 15, 2024 IST | Web Editor
Advertisement

“திமுக மீது விஜய் வைத்துள்ள குற்றச்சாட்டு பிசுபிசுத்துப்போகும். நடிகர் விஜய் நிச்சயமாக தோல்வியை தான் சந்திப்பார்” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Advertisement

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

“2021-ல் எவ்வாறு எடப்பாடி பழனிசாமியால் கூட்டணி அமைக்க முடியாமல் போனதோ, அதேபோலதான் 2026ல் அமையும். முதலமைச்சர் நாற்காலியை மு.க.ஸ்டாலின் இருக பற்றி கொண்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் முதலமைச்சர் கனவு ஒருபோதும் பலிக்காது.

நடிகர் விஜய், எம்ஜிஆர் பாணியை பின்பற்ற பார்க்கிறார். அது ஒருபோதும் நடக்காது. எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது. விஜய் எங்கள் மீது வைத்த குற்றச்சாட்டு, ஏற்கனவே பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுதான். அது எப்படி பிசுபிசுத்து போனதோ, அதேபோல இதுவும் பிசுபிசுத்து போகும்.

அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்து பல்வேறு தோல்விகளை கண்டுள்ளார். அவர் லண்டனில் இருந்து திரும்ப வந்தும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. பாஜகவிற்கு 11% வாக்கு எவ்வாறு வந்தது என்பதை அதிமுக தான் கூற வேண்டும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் இன்னும் குறையும்.

ஆதாரம் இல்லாமல், ஆதவ் அர்ஜுனா வீட்டில் ரெய்டு நடத்துவதற்கு நீதிமன்றம் நல்ல விளக்கங்களை தரும். அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தெளிவான வழிகாட்டுதல்களை நமக்கு தந்துள்ளது. திருமாவளவன் திமுக கூட்டணியில் தொடர்வதாக உறுதியாக சொல்லிவிட்டார். சர்வாதிகாரிகளுக்கு தமிழ்நாட்டில் ஒரு போதும் இடம் இல்லை; அப்படி யாராவது சொன்னால் அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

யார் யாருடன் கூட்டணிக்கு போனாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் நண்பர்கள்” என தெரிவித்தார்.

Tags :
ADMKDMKlaw ministerNTKRegupathySeemantvkTVK Vijay
Advertisement
Next Article