"விஜயகாந்த், ராமதாஸ் கட்சி தொடங்கியவுடன் கருணாநிதியை தான் எதிர்த்தார்கள்" - திருமாவளவன்!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் பொது கூட்டம் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேரூந்து நிலையம் அருகே நடைப்பெற்றது. அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக அமைச்சர் சேகர்பாபு, விசிக தலைவர் திருமாவளவன், திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சு.வீ, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், "நினைவேந்தல் நிகழ்வை பொருளை ஓய்வதில்லை என்ற தலைப்பு ஆழ்ந்து சிந்திக்ககூடிய ஒன்றாக உள்ளது. கலைஞர் போராடிக் கொண்டிருக்கிறார் என்பதை இந்த தலைப்பு உணர்த்துகிறது. தமிழக அரசியலில் தொடர்ந்து அரை நூற்றாண்டுகளாக அரசியல் களத்தில் மைய புள்ளியாக இருந்தார். அன்றைக்கும் கலைஞரை தான் குறிவைத்தனர்.
இன்றைக்கும் அவரை தான் குறிவைக்கின்றனர். தமிழகத்தில் கருணாநிதி மீது தான் இன்றைக்கும் வெறுப்பு. எம்ஜிஆர் அரசியல் கொள்கை என்பது கருணாநிதி வெறுப்பு தான். கருணாநிதிக்கு எதிரான வெறுப்பு திட்டமிட்டு முன்னிறுத்தப்பட்டது. பாமகவின் தொடக்க காலங்களில் கருணாநதி எதிர்ப்பில் தான் கடந்து வந்தது. எம்ஜிஆர், வைகோ என முக்கிய தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறினார்கள் கருணாநிதியிடம் இருந்த போர்குணம் தான் கட்சியை கட்டமைத்தது.
1976 மிசாவால் வந்த சோதனை விட கடுமையானது எம்ஜிஆர் பிரிந்த போது ஏற்பட்ட சோதனையை விட கடுமையானது வைகோ வெளியேறிய போது ஏற்பட்ட நெருக்கடியை விட கடுமையானது ராஜுவ்காந்தி படுகொலை. பிரதமர் ராஜூவ் காந்தி படுகொலையை கருணாநிதிக்கு எதிராக திருப்பினார்களோ, அதே போல் ஈழ தமிழர்களின் படுகொலையும் அவருக்கு எதிராக திருப்பப்பட்டது. புலம்பெயர் தமிழ்களிடம் ஈழ படுகொலைக்கு காரணம் கருணாநிதி தான் என சேர்த்து விட்டனர்.
கருணாநிதி எதிர்ப்பு தான் தமிழ்நாடு அரசியலில் ஒரு நிலைபாடாக மாறி உள்ளது. தமிழ்தேசியத்தின் எதிரியே கருணாநிதி தான் என பேசுகின்றனர். எம்ஜிஆர் ஆட்சியில் இருக்கும் போது ராமதாஸ் போராட்டம் நடத்தினார். ஆனால் கலைஞர் ஆட்சியிக்கு வந்த போது 108 சாதிகளை ஒன்றாக சேர்த்து எம்பிசி என சமூக நீதிக்காக உருவாக்கினார். ஆனால் ராமதாசை பார்த்து பயந்து உருவாக்கவில்லை. தமிழ் உள்ளவரை கருணாநிதி பெயர் இருக்கும் என்பதற்கு குமரியில் வள்ளூவர் சிலையை நிறுவினார். வள்ளூவர் கோட்டம் உருவாக்கினார்.
இந்தியாவில் முதல் முறையாக ஐடி பூங்காவை உருவாக்கியவர் கருணாநிதி தான். தேமுதிக உருவாக்கிய போது கூட விஜயகாந்த் கருணாநிதி எதிர்ப்பை தான் முன்னிறுத்தானார். சமஸ்கிருதம் தான் உயர்ந்த மொழி என மோகன்பகவத் பேசினார். அவரை எதிர்க்க ஆள் இல்லை, தேர்தல் அரசியலுக்கு முன் நானும் கலைஞரை விமர்சித்து இருக்கிறேன். நான் மிகவும் அதிர்ந்தது முள்ளிவாய்க்கால் படுகொலை பழியையும் கலைஞர் மீது போடப்பட்டது தான். விளிம்பு நிலை மக்களுக்கான அரசியலை கருணாநிதி எடுத்ததால் தான் அவரை எதிர்க்க காரணமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.