Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து தோற்றவர்கள் பட்டியலில் விஜய்-யும் சேருவார்!” - அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன்

04:18 PM Feb 03, 2024 IST | Web Editor
Advertisement

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை தவிர தோற்றவர்கள் பட்டியல் பெரியது. அந்த பட்டியலில் விரைவில் விஜய்-யும் சேருவார் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் கூறியுள்ளார். 

Advertisement

நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சித் தொடங்குவார் என்று என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில்,  நேற்று அவர் அரசியல் கட்சியை தொடங்கினார்.  அவர் தொடங்கிய கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  நடிகர் விஜய் கட்சி தொடங்கியிருப்பது குறித்து பல்வேறு கட்சியினர் தங்கள் வாழ்த்துகளையும்,  கருத்துகளையும் முன்வைத்து வருகின்றனர்.  இதனை தொடர்ந்து அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் தனது கருத்தை முன் வைத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் பாஜக செய்ய முடியாததை நடிகர் விஜயின் வாயிலாக அக்கட்சி சாத்தியப்படுத்த முயல்கிறது.  அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை தவிர திரையுலகில் இருந்து வந்த யாரும் அரசியலில் வெற்றியடையவில்லை.

சினிமாவில் இருந்து அரசிலுக்கு வந்த தோற்றவர்களின் பட்டியல் பெரியது.  விஜயகாந்த், சரத்குமார்,  கமல்ஹாசன் ஆகியோர் இதில் அடங்குவர்.  இந்த தோல்விப்பட்டியலில் விஜய்-யும் விரைவில் சேர்வார்.

இவ்வாறு அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் கூறியுள்ளார்.

Tags :
தமிழக வெற்றி கழகம்தலைவர் விஜய்தளபதி விஜய்Kovai Sathyannews7 tamilNews7 Tamil Updatespolitical partyTamizha Vetri KazhagamTamizhaga Munetra Kalagamthalapathy vijaytvkTVK VijayvijayVijay Makkal iyakkam
Advertisement
Next Article