Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிக்கும் ‘PHOENIX வீழான்’ படத்தின் டீசர் வெளியீடு!

08:34 PM Jun 16, 2024 IST | Web Editor
Advertisement

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிக்கும் ‘PHOENIX வீழான்’திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி நடிக்கும் ‘PHOENIX வீழான்’ திரைப்படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார். இது திரைப்பட இயக்குனராக அவருக்கு முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். மேலும், பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். கிக் பாக்ஸின் கனவோடு பயணிக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் அதிரடியான மாற்றங்கள் குறித்த கதையாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

இதையடுத்து, இன்று வெளியான  ‘PHOENIX வீழான்’ திரைப்படத்தின் டீசரை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் வெளியிட்டு படக் குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள் : டெல்லியில் கடும் தண்ணீர் நெருக்கடி! டெல்லி ஜல் போர்டு அலுவலகம் சூறையாடப்பட்டது! – பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

முன்னதாக, ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூர்யா விஜய் சேதுபதி, "தந்தையின் நிழலில் வளர விரும்பவில்ல. தனியாக நின்று தன்னால் முடிந்ததை சாதிக்க விரும்புகிறேன்"  என கூறியிருந்தது என்பது குறிப்பிடதக்கது.

Tags :
Phoenix VeehaanReleasedSonSuryaTeaserVijay sethupathi
Advertisement
Next Article