டப்பிங் யூனியன் தேர்தல் - வாக்களித்த விஜய் சேதுபதி!
தென்னிந்திய சினிமா, சீரியல் டப்பிங் யூனியன் தேர்தலில் நடிகர் விஜய்சேதுபதி வாக்களித்தார்.
தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்களின் சங்கத்திற்கு 2024 - 2026ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. விருகம்பாக்கத்தில் உள்ள AKR மஹாலில் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் நடிகரும், சங்கத்தின் தற்போதைய தலைவருமான ராதாரவி மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ராஜேந்திரன் மற்றும் சற்குணம் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சூடு பிடிக்கும் இந்த டப்பிங் யூனியன் தேர்தலில் நடிகர்கள் போஸ் வெங்கட், நாசர், அம்பிகா விஜய் சேதுபதி, சரத்குமார் உள்ளிட்டோர் தங்களது வாக்குகளை பதிவிட்டு சென்றனர். இதுவரை 880 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நடிகராக வாக்களிக்க வருகை தந்து கொண்டுள்ளனர். இந்த வரிசையில் நடிகர் விஜய் சேதுபதி வாக்களிக்க நடிகர் சங்கத்திற்கு வருகை புரிந்துள்ளார்.
“யாரு வெற்றி பெற்றாலும் நல்லது தான். நல்லதே செய்யுங்கள் அதுதான் இங்கு தேவை. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும். அதுக்கு காரணம் லக்கு தான் ஏனென்றால் தயாரிப்பாளர்கள் எப்போதும் பயந்து கொண்டே இருப்பார்கள. ஆண் இயக்குநருக்கும், பெண் இயக்குநர் என்பதற்கும் வேறுபாடுகள் உள்ளது. அந்த உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறும் என்று நினைக்கிறோம். விஜய் வரட்டும் அரசியலுக்கு வருவது நல்லது தான். எனக்கு ஆரோக்கியம் இருக்கும் வரை நடிக்க தான் செய்வேன். நல்ல கேரக்டர் வந்தால் சின்னத்திரை, பெரிய திரை என்ற வித்தியாசங்களை பார்க்காமல் நடிப்பேன் சென்னையில் தான் இருக்கிறேன் வரட்டும் நடிக்கிறேன்”.
“தளபதி 68 படத்திற்கான ஷூட்டிங் சூடு பிடித்து கொண்டு வருகிறது. என் மகன் அதன் அடித்து வருகிறார் பெருமையாக இருக்கிறது இருந்தாலும் நான் ஷூட்டிங்கில் என்ன செய்தார்கள். இது என்ன கதை என்று எல்லாம் கேட்க மாட்டேன். என்னுடைய படங்களைத் தவிர வேறு எதிலும் தலையிட மாட்டேன். அந்தகன் படம் கூடிய விரைவில் வெளியாகும் தனியாக வரவேண்டும் என்பதற்காகவும் அந்த நாட்களுக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறோம்” என தெரிவித்தார்.