Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'பயமறியா பிரம்மை' திரைப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

09:53 AM Jun 14, 2024 IST | Web Editor
Advertisement

அறிமுக இயக்குநர் ராகுல் சுபாலி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் 'பயமறியா பிரம்மை திரைப்படத்தின் ட்ரெய்லரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

Advertisement

புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பயமறியா பிரம்மை'. அறிமுக இயக்குநர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில்,  குரு சோமசுந்தரம்,  ஜான் விஜய்,  ஹரிஷ் உத்தமன்,  வினோத் சாகர்,  விஸ்வந்த்,  சாய் பிரியங்கா ரூத்,  திவ்யா கணேஷ்,  ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படத்துக்கு கே (கிருஷ்ண குமார்) இசையமைத்துள்ளார்.  அகில் பிரகாஷ் படத்தொகுப்பு செய்கிறார்.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது.  இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மிகவும் வித்தியாசமாக இருந்து மக்களின் கவனத்தை ஈர்த்தது. அதைத் தொடர்ந்து படத்தின் டீசர் வெளியாகியது.

இதையும் படியுங்கள் : டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்து அணியை வீழ்த்தி வங்கதேச அணி அபார வெற்றி!

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.  இந்த ட்ரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  "பயமறியா பிரம்மை' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
BayamariyaBrammaiBayamariyaBrammaiTrailercinemaguru somasundaramJDjohn vijayrahul kabaliTeaserTrailer
Advertisement
Next Article