Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சர்ச்சையை கிளப்பிய விஜய் போஸ்டர் - முதல்வர் விஜய்யா?

'முதல்வர் விஜய்' என்ற போஸ்டர் வெளியாகி சர்ச்சையை கிளப்பி வருகிறது...
04:05 PM Jul 09, 2025 IST | Web Editor
'முதல்வர் விஜய்' என்ற போஸ்டர் வெளியாகி சர்ச்சையை கிளப்பி வருகிறது...
Advertisement

எம். கோபி இயக்கத்தில் நடிகர்கள் அப்புக்குட்டி, தினேஷ், தம்பி ராமையா நடிப்பில் உருவான படம் ‘யாதும் அறியான்’. ஹாரர் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

Advertisement

இத்திரைப்படத்தில் ஆர்வத்தை தூண்டும் விதமாக வசனமும், ஒளிபதிவும் அமைந்துள்ளது. இதனால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ட்ரைலரில் "தமிழகத்தில் இனி இலவசம் கிடையாது. இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளுக்கு புது திட்டம் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு" என்கிற நாளிதழ் போஸ்டர் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இந்த போஸ்டரால் விஜயின் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றாலும், சமூக வலைதள பக்கங்களில் விமர்சனங்களும் எழுந்துள்ளது. ஆக மொத்தம், யாதும் அறியான்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்த ஒற்றை போஸ்டர் கவனம் பெற்றதால் அத்திரைப்படம் குறித்த விவாதத்தை அதிகப்படுத்தியுள்ளது.

Tags :
appukuttycinemalatestNewstvkVIJAIYaathum Ariyaan
Advertisement
Next Article