சென்னையில் மீண்டும் ரசிகர்களை சந்தித்த விஜய் - வைரல் வீடியோ
மீசை இல்லாத லுக்கில் சென்னையில் உள்ள போரூரில் உள்ள பாழடைந்த வீடு போன்ற செட்டப்பில் நடிகர் விஜய் இருக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரி அடுத்தடுத்து கோலிவுட்டில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் பேசுபொருளாகி உள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் ஏறக்குறைய 200 கோடி ரூபாய் சம்பளமாக விஜய் பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. தன்னுடைய கடைசி படம் என விஜய் முன்னதாக அறிவித்திருந்த தளபதி 69 படத்திலும் அவர் 200 கோடி ரூபாய்களை சம்பளமாக பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ள நிலையில் படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் திரிவிக்ரம் இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தன்னுடைய நடிப்பின்மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகிறார் நடிகர் விஜய். இவர் நடிப்பை விட்டுவிட்டு முழுநேர அரசியல்வாதியாக களமிறங்கவுள்ளது அனைத்து தரப்பினரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை உண்டு செய்துள்ளது. இருந்தபோதிலும் நீண்ளட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகிறது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The greatest of all time படத்தில் நடித்து வருகிறார் விஜய். அவ்வப்போது சூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களையும் சந்தித்து வருகிறார்.
இதனிடையே இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சூட்டிங்கின்போது அடுத்தடுத்து ரசிகர்களை விஜய் சந்தித்து வருகிறார். அந்த வகையில் இன்றும் GOAT படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் ஏராளமான ரசிகர்களை சந்தித்து கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் விஜய். இந்த சந்திப்பின்போது விஜய்யின் மீசை, தாடியில்லாத லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த லுக் படத்தில் அவரது மகன் கேரக்டருக்கானது என்பது தெரியவந்துள்ளது. அவரை நேரில் பார்த்த அவரது ரசிகர்கள் உற்சாக மிகுதியில் ஆரவாரம் செய்தனர்.