திமுக எதிர்ப்பை மட்டுமே கொண்டு ஆட்சியை கைப்பற்ற நினைக்கிறார் விஜய் - திருமாவளவன் விமர்சனம்!
சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியது:-
”திமுக எதிர்ப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என விஜய் கருதுகிறார். திமுக அரசு மீதான விமர்சனங்களுக்கு பதிலை உரிய நேரத்தில் திமுக தெரிவிக்கும். விஜய் வரவால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து விடும் என்று மாய தோற்றத்தை சிலர் உருவாக்குகின்றனர். ஊடகங்களும் பெரிய பங்கு வகிக்கிறது. ஆனால் திமுக தனித்து ஆட்சியை நடத்தவில்லை. கூட்டணி பலத்துடன் ஆட்சியில் இருக்கிறது. அந்த கூட்டணி இன்னும் வலுவாக கட்டுப்பாடுடன் இயங்கி வருகிறது. வரும் தேர்தலை சந்திக்க உள்ளது. மதசார்பற்ற கூட்டணியை வீழ்த்தி ஆட்சி மாற்றம்
ஏற்படுத்த கூடிய அளவிற்கு விஜய்யால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.
கூட்டத்தை வைத்து ஆட்சியை கைப்பற்ற முடியாது என்பது எல்லாருக்கும் பொருந்தும். அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தினால் ஆட்சி மாற்றத்தை விசிக ஏற்படுத்துமா என விவாதம் நடக்கவில்லை. திருமாவளவன் தாக்கத்தை ஏற்படுத்துவாரா மாற்றத்தை ஏற்படுத்துவாரா என விவாதிக்கவில்லை. விஜய் ஒரு சினிமா நடிகர் என்பதை வைத்து கொண்டு பெரிய
மாற்றம் நிகழ போவது போன்று உருவாக்குகின்றனர். திமுக, விசிக கம்பியூனிஸ்டு போன்ற கட்சிகளுக்கு வரக்கூடிய லட்சக்கணக்கான பேரும் கொள்கை கோட்பாடு என்று இருப்பவர்கள். நீண்ட காலமாக அரசியலில் மக்களுடன் நிற்பவர்கள். அந்த பெரும் திரளுக்கும் விஜய் திரண்டு வருவதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. இந்த மக்களை திரளை மட்டும் ஒரு பொருட்டாக எடுத்து கொண்டு ஆட்சி மாற்றத்திற்கான நிகழ்த்த போகிறார்கள் என்ற தோற்றத்தை உருவாக்க நினைக்கின்றனர்.
தொடர்ந்து திமுக அரசு, திமுக தலைமை மட்டுமே விஜய் பேசி வருவதால் தான் எதோ திட்டமிட்டு அஜெண்டவிற்காக களம் இறக்கி வந்து இருக்கிறார் என்ற தோற்றத்தை உருவாகிறது. விஜய் பொதுவான தமிழக அரசியலை பேசினால் எதிர்காலத்தில் என்ன செய்ய் போகிறோம் என பேசினால் இந்த தோற்றம் உருவாகாது. திட்டமிட்டு விஜய் களத்தில் இறக்கி விடப்பட்டாரா என்ற கேள்வி எழுகிறது.
கமல்ஹாசன் திமுக கூட்டணியில் ஒரு அங்கமாக இருக்கிறார். அரசியலில் அடியெடுத்து வைக்கும் போது அவர் பார்த்த அரசியல் வேறு. அரசியலில் தலைவராக உருவான போது அரசியலில் மாற்றம் ஏற்பட்டது. கொள்கை சார்ந்த மாற்றம் ஏற்பட்டது. விஜய் விவகாரத்தில் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். எதிர்காலத்தில் அரசியலில் ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்”
என்று பேசினார்.
முன்னதாக திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட தவெக தலைவர் விஜய் திமுக அரசினை கடுமையாக விமர்சித்திருந்தார்.