விஜய் - ஜெனிலியா நடித்த ”சச்சின்” திரைப்படம் ரீ ரிலிஸ் : உறுதி செய்த படக்குழு!
ஜான் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படம் ரீ ரிலிஸ் செய்ய உள்ளதாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்தார்.
தமிழ் சினிமாவின் உச்ச நச்சத்திரமாக இருப்பவர் தான் விஜய். இவரின் திரைப்படம் வெளியானாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். இந்நிலையில் கடந்த 2005-ம் ஆண்டு ஜான் இயக்கத்தில் விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் வெளியான படம் தான் சச்சின். இதில் வடிவேலு, சந்தானம், பாலாஜி, ரகுவரன் என பலர் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உறுவான இப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பெருமளவு ஹிட்டாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது. இன்றும் இப்படத்தின் காமெடி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்படத்தில் விஜய் மற்றும் ஜெனிலியா இருவருக்கும் இடையே மிகவும் அழகான கெமிஸ்டிரி இருக்கும். இதனால் இந்த ஜோடி ரசிகர்கள் மத்தியில் பெருமளவு ரசிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கலைப்புலி எஸ்.தாணு சச்சின் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆக போகின்றன. இதனை முன்னிட்டு ஏப்ரல் மாதம் இப்படத்தை ரீ ரிலீஸ் செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், முதன்முதலில் வெளியான போது கிடைத்த வரவேற்பை காட்டிலும் இந்த முறை கொள்ள லாபம் வரப்போகுது என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர் பேசியுள்ளார்.