Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#TheGoat | விஜய்யின் 'நா ரெடி தான் வரவா' பாடலை பாடி அசத்திய ஜப்பான் ரசிகை!

12:40 PM Sep 05, 2024 IST | Web Editor
Advertisement

விஜய்யின் 'தி கோட்' திரைப்படம் வெளியானதை தொடர்ந்து, சென்னை ECR விஜய் பார்க் திரையரங்கில், விஜய் ரசிகர்கள் ஜப்பான் ரசிகைகளுடன் GOAT வடிவத்தில் கேக் வெட்டி கொண்டாடினர்.

Advertisement

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (GOAT – Greatest Of All Times). இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கோட் திரைப்படம் இன்று (செப். 5) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கோட் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு, அதாவது காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை 5 காட்சிகளை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 1100 திரைகளில் காலை 9 மணிக்கு படம் திரையிடப்பட்டது. வடமாநிலங்களில் 1000 திரைகளிலும் மற்றும் பிற அண்டை மாநிலங்களிலும் காலை 4 மணி முதல் கோட் திரைப்படம் திரையிடப்பட்டது. வெளிநாடுகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 6000 திரைகளில் கோட் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியானது.

இதையும் படியுங்கள் :GOAT | விஜய் திரைப்படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’? -விசிக எம்.பி. ரவிக்குமார் கண்டனம்…

இதற்கிடையே, திரையரங்குகளில் மேளதாளம் முழங்க ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நடிகர் விஜயின் முந்தைய திரைப்பட பாடல்கள் ஒளிபரப்பப்பட்டு, ரசிகர்கள் குத்தாட்டம் ஆடி, கோட் திரைப்படத்தை ரசிகர்கள் வரவேற்றனர். திரையரங்குகள் முன்பாக பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ரசிகர்கள் கொண்டாட்டி தீர்த்தனர்.

இந்நிலையில், ECR விஜய் பார்க் திரையரங்கில், ஜப்பான் ரசிகைகளுடன் GOAT வடிவத்தில் கேக் வெட்டி 'கோட்' திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடினர். அப்போது அந்த ஜப்பான் ரசிகை 'லியோ' திரைப்படத்தின் 'நா ரெடி தான் வரவா' பாடலை பாட, அங்கிருந்த ரசிகர்கள் மகிழ்ந்தனர்.

Tags :
actorvijayArchanaKalpathifdfsgoatGOATFDFSGOATTheMovienews7TamilUpdatesThalapathyThalapathyVijayTheGreatestOfAllTimeVenkatPrabhuvijayYuvanShankarraja
Advertisement
Next Article