Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”விஜயிடம் அந்த புரிதல் இல்லை” - பிரகாஷ் ராஜ் ஓபன் டாக்!

தவெக தலைவர் விஜய்யிடம் அந்த புரிதல் இல்லை என நடிகர் பிரகாஷ் ராஜ் வெளிப்படையாக பேசியுள்ளார்.
09:18 PM May 05, 2025 IST | Web Editor
Advertisement

நடிகர் பிரகாஷ் ராஜ் நடிப்பதோடு மட்டுமில்லாமல் அவ்வப்போது பொது வெளியில் தனது அரசியல் கருத்துகளை பகிர்ந்து வருவார். இந்த நிலையில் தன்னுடன் பணியாற்றிய பவன் கல்யாண் மற்றும் விஜய் ஆகியோரின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் சமீபத்திய நேர்காணலில் பேசியபோது, “விஜய்யை பவன்கல்யாணுடம் மக்கள் அடிக்கடி ஒப்பிடுவார்கள். இருவரையும் இருபது ஆண்டுகளுக்கு மேல் எனக்கு தெரியும். பவன் கல்யாண் அவரது சகோதரர் சிரஞ்சீவியின் குடும்பத்திலிருந்து வந்தவர். அதேபோல், விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஒரு பிரபலமான இயக்குனர். அவர் தனது நட்சத்திர அந்தஸ்தைப் பெறுவதற்கு முன்பே விஜய்யை அறிமுகப்படுத்த ஏராளமான படங்களைத் தயாரித்தார்.

பவன் கல்யாண் ஒரு தசாப்தத்திற்கு முன்பு அரசியலுக்கு வந்தார், விஜய் அரசியலுக்கு புதியவர். நான் அவர்களை அறிந்த ஆண்டுகளில், நாங்கள் ஒருபோதும் அரசியல் பற்றி தீவிரமாகப் பேசியதில்லை. அவர்கள் இருவரும் நடிகர்கள், அதில் தங்களுக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து அரசியலில் நுழைந்துள்ளனர்.

இருவரிடமும் தொலை நோக்கு பார்வையையும் இல்லை பிரச்னைகள் பற்றிய புரிதலும் இல்லை. ஆனால், இதுபோன்ற பிரபலங்கள் அரசியலில் நுழையும்போது, ​​மக்கள் மாற்றத்தை தேடுவதன் காரணமாக சில வெற்றிகள் கிடைக்கக்கூடும். ஆனால், மீண்டும் அவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள். பவன் கல்யாண் தனது சிந்தாந்தத்தில் தெளிவில்லாதவர். அவரிடம் நாட்டை எப்படி கொடுக்க முடியும்”

இவ்வாறு பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

Tags :
pawan kalyanPrakash RajtvkpartyTVKVijay
Advertisement
Next Article