‘VD12’ படத்தின் டீசர், டைட்டில் வெளியீடு!
தெலுங்கு சினிமாவில் ‘நுவ்விலா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா . அதனைத் தொடர்ந்து பெல்லி சுப்புலு, எவடே சுப்ரமணியம் போன்ற படங்களில் நடித்த இவர் ‘அர்ஜுன் ரெட்டி’ திரைபடத்தின் மிகப்பெரிய வெற்றியின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானார். இவர் கடைசியாக ‘கல்கி’ படத்தில் அர்ஜூனர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜெர்ஸி படத்தின் இயக்குனர் கெளதம் தின்னூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா தனது 12வது படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் உடன் பாக்யாஸ்ரீ போஸ் , கேஷவ் தீபக் , ருக்மினி வசந்த் , ஸ்ரீராம் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்க்கு கிரிஷ் கந்தரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் விஜய் தேவர்கொண்டா நடிக்கும் VD12 படத்தின் டைட்டில், டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்க்கு ‘கிங்டம்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் டீசருக்கு தமிழில் நடிகர் சூர்யாவும், தெலுங்கில் ஜூனியர் என்டிஆரும் பின்னணி குரல் கொடுத்துள்ளனர். சுதந்திரப் போராட்ட காலத்தில் நடைபெறுவதாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் வருகிற மே 30ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.