Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விக்னேஷ் சிவனின் 'LIC' படத்தின் தலைப்பு மாற்றம் - புதிய டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜூலை 25ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு!

07:50 AM Jul 23, 2024 IST | Web Editor
Advertisement

விக்னேஷ் சிவனின் 'LIC' படத்தின் தலைப்பு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வருகிற 25ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், LIC -  லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகி வருவது குறித்த விளம்பரங்கள் சமீபத்தில் வெளியாகின. இதனைத்தொடர்ந்து எல்ஐசி என்ற பெயரை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்றும் எல்ஐசி - காப்பீட்டு நிறுவனம் தரப்பில் பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் வழக்கறிஞர் கார்த்திகை பாலன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அந்த நோட்டீஸில் எல்ஐசி என்பது தங்கள் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட வணிக குறியீடு என்றும் அதை தவறாக பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறார். படத்திற்கு எல்ஐசி பெயரை பயன்படுத்துவதன் மூலம் தங்கள் நிறுவனத்தின் மீது மக்களும் வாடிக்கையாளர்களும் கொண்டிருக்கும் நன்மதிப்பை குறைக்கும் வகையில் உள்ளதாகவும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸ் பெற்றுக் கொண்ட ஏழு நாட்களுக்குள் படத்தின் பெயரை மாற்றாவிட்டால் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டது.

இதேபோல பூஜை தொடங்கிய அடுத்த நாளே LIC என்கிற தலைப்பு என்னிடம் மட்டுமே இருப்பதால் அதை விக்னேஷ் சிவன் தன் படத்தில் எந்த விதத்திலும் பயன்படுத்தக்கூடாது என்றும் இனியும் இச்செயலை விக்னேஷ் சிவன் தொடர்வார் என்றால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்றும் இயக்குநர் எஸ்.எஸ்.குமரன் தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் படத்தின் தலைப்பின் தலைப்பை மாற்ற உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் வருகிற 25ம் தேதி 12.00AM -க்கு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவித்துள்ளது.

Tags :
Director Vignesh ShivanLICmoviePradeep Ranganathanvignesh shivan
Advertisement
Next Article