Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெற்றிமாறனின் #Viduthalai2 வெற்றிக் கொண்டாட்டம் - வீடியோ வெளியீடு!

08:23 PM Dec 31, 2024 IST | Web Editor
Advertisement

விடுதலை 2 படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் தொடர்பான வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Advertisement

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து பவானி ஸ்ரீ,கவுதம் வாசுதேவ் மேனன், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கினார். இதில் சூரி, விஜய் சேதுபதியுடன் இணைந்து மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த டிச.20ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் இதுவரை ரூ.50 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. விடுதலை - 2 திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் நேற்று கொண்டாடினர். இவ்விழாவில் இயக்குநர் வெற்றி மாறன், தயாரிப்பாளர், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டனர். இந்த நிலையில் வெற்றி விழாவின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement
Next Article