“தேவையை பதிவிட்டால் வீடியோ ரெடி!” - openai நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேனின் பதிவு!
தேவையை பதிவிட்டால் வீடியோ ரெடி என்று கூறி openai நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் சோரா அம்சத்தை பயன்படுத்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரல் ஆகியுள்ளது.
சமீப காலமாகவே ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு உலகளவில் அதிகரித்து வருகிறது. இதன் வளரச்சி தொழில்நுட்பம் மட்டுமல்லாது மற்ற துறைகளிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. ஏஐ-யில் பல வெர்ஷன்களை தொழில் நிறுவனங்கள் வெளியிட்டு சோதனை செய்து வருகின்றனர். கட்டுரை எழுத, கதை எழுத, படம் வரைய, எளிமையாக படிக்க, தரவுகளை ஒழுங்குபடுத்துதல் என்று எல்லாவற்றையும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் செய்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த வாரம் openai நிறுவனம் சோரா என்ற புதிய தொழில்நுட்ப அம்சத்தை வெளியிட்டது. சோராவில் எப்படியான கதை அல்லது விளக்கம் வேண்டுமென குறிப்பிட்டால் ஒரு நிமிடம் வரையிலான யதார்த்த காட்சிகளை உருவாக்கும் என அந்நிறுவனம் தெரிவித்தது. மேலும் இதுகுறித்து ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டார். அதில்,
இதற்கு குணால் ஷா என்பவர், கடலில் வெவ்வேறு விலங்குகள் சைக்கிள் பந்தயம் செய்யும் போட்டியின் கழுகுப்பார்வை காட்சி என பதிவிட்டிருந்தார்.
அவர் கேட்டிருந்த வீடியோவை சாம் ஆல்ட்மேன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வரை 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த பதிவிற்கு ஆயிரக்கணக்கான கருத்துகளும் பதிவாகி வருகின்றன. அதில் சில கருத்துகள் பின்வருமாறு;
இது சுவாரஸ்யமானதுதான். ஆனால் இதன் வர்த்தக மதிப்பு பூஜ்ஜியமாகும்.
பாலஸ்தீன் ஒரு தேசமாகவும், ஜெருசலேம் அதன் தலைநகரமாகவும்.
வடகொரியரும், தென்கொரியரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்திருக்க வேண்டும். அவர்களின் தலைவர்கள் மல்யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும்போது என பலர் புதுவிதமான கருத்துகளை தெரிவித்து வர்ருகின்றனர்.