Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மகாராஷ்டிராவில் ரூ.5கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாக பரவும் வீடியோ - தற்போதையதுதானா? | #FactCheck

02:09 PM Nov 15, 2024 IST | Web Editor
Advertisement

This news Fact Checked by The Quint

Advertisement

மகாராஷ்டிராவில் வருகிற நவம்பர் 20ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பாஜக – ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைந்து மகாயுதி எனும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. மறுபுறம் எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே அணி சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசின் ஒன்றிணைந்து மகா விகாஸ் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன.

மகராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்ளின் ஒருபகுதியாக மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட சுமார் 5 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளின் மூட்டைகள் ஒன்றாக அடுக்கப்பட்டிருப்பதைக் காட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.

மேலும் இந்த வீடியோ காங்கிரஸ் கட்சியின் ஷாமா முகமது பகிர்ந்து "ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரின் நெருங்கிய உதவியாளரிடமிருந்து ₹5 கோடி கைப்பற்றப்பட்டது. பாஜகவும் ஏக்நாத் ஷிண்டேவும் அரசியலமைப்புக்கு எதிரான அரசாங்கத்தை நடத்தினர். தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் அமைதியாக இருக்கிறது” என பதிவிட்டிருந்தார். மேற்கண்ட இடுகை மேடையில் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.

உண்மை சரிபார்ப்பு :

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் என சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட தகவல்களை கூகுள் லென்ஸின் உதவியைப் பயன்படுத்தி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தினோம். அதன் முடிவில்  'யுனிக் மல்டி அட்வர்டைஸ்மென்ட்' என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டதைக் இதே காட்சிகள் இடம்பெற்றிருந்ததை காண முடிந்தது.

பதிவேற்ற தகவலின்படி இந்த வீடியோ ஏப்ரல் 2020 க்கு முந்தையது, என முடிவுக்கு வர முடிந்தது. எனவே இந்த வீடியோ மகாராஷ்டிராவில் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட பணம் அல்ல என்பது உறுதியாகியுள்ளது. இதே வீடியோ 11 செப்டம்பர் 2021 அன்று "Indian Lot of money #newnotes #bigmoney என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டது.

இந்த YouTube வீடியோக்களின் தரம் மற்றும் உறுதிப்படுத்த முடியாத தகவல்களின்படி இதில் இடம்பெற்றுள்ள பணம் உண்மையானதா அல்லது போலியான நோட்டுகளைக் காட்டுகிறதா என்பதை எங்களால் சரிபார்க்க முடியவில்லை என குயிண்ட் தெரிவித்துள்ளது.

5 கோடி ரொக்கம் பறிமுதல் :

தி இந்து நாளிதழில் வெளியான தகவலின்படி , சுங்கச்சாவடி அருகே ஒரு வாகனத்தில் இருந்து ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, நான்கு பேரை புனே போலீஸார் கைது செய்தனர் . இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான அமோல் நலவாடே சங்கோலாவைச் சேர்ந்த ஷாஜிபாபு பாட்டீல் என்ற சிவசேனா எம்எல்ஏவுடன் தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறது. எனவே இதற்கும் கட்டுக்கட்டாக பணம் என பரவும் வீடியோவுக்கும் தொடர்பு இல்லை. வீடியோ பழையது என்பது உறுதியாகிறது.

முடிவு: 

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 5கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றதாக பரவும் வீடியோ பழையது எனவும் இதனுடன் தொடர்புடையது இல்லை எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Note : This story was originally published by The Quint and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
FalseMaharastraMoney
Advertisement
Next Article