வங்கதேசத்தில் இந்து மாணவர் கொல்லப்பட்டதாக வீடியோ வைரல் - Fact Check
This News Fact Checked by ‘PTI’
வங்கதேசத்தில் இந்து மாணவர் ஒருவர் தெருக்களில் அடித்துக் கொல்லப்பட்டதாக வீடியோ வைரலாகி வருகிறது இதுகுறித்த உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.
வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினருக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இந்து மாணவர் ஒருவர் தாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பகிரப்பட்டது. டாக்காவில் செயல்பட்டு வரும் டாக்டர் மஹ்புபுர் ரஹ்மான் மொல்லா கல்லூரியில் மாணவர் தாக்கப்பட்டதில் மரணமடைந்ததாக வீடியோ, வைரல் பதிவுகளுடன் பரவியது. அதில் ஒரு கும்பல் ஒரு மாணவரை கம்புகளால் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோ குறித்த விசாரணையில், PTI Fact Check Desk இந்த கூற்று தவறானது என்று கண்டறிந்தது. கடந்த மாதம் வங்கதேசத்தில் உள்ள மூன்று கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை மோதல்கள் குறித்த வீடியோ தவறாக மதக் கண்ணோட்டத்துடன் பகிரப்பட்டு வருகிறது.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் டிசம்பர் 4 அன்று பகிர்ந்து வங்கதேசத்தில் ஒரு இந்து மாணவரை ஆயுதங்கள் ஏந்திய மாணவர்கள் குழு ஒன்று தாக்கிய வீடியோவைப் பகிர்ந்து அந்த கும்பலால் மாணவர் அடித்துக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வைரல் இடுகையின் இணைப்பு மற்றும் ஸ்கிரீன்ஷாட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
உண்மை சரிபார்ப்பு :
பிடிஐ டெஸ்க், கூகுள் லென்ஸ் மூலம் வைரலான வீடியோவின் கீஃப்ரேம்களை தேடியபோது நவம்பர் 25 அன்று உள்ளூர் செய்தி சேனல் (bdnews24.com) வெளியிட்ட யூடியூப் வீடியோவை காணமுடிந்தது. இந்த வீடியோவின்படி , டாக்டர் மஹ்புபுர் ரஹ்மான் மொல்லா கல்லூரி, அரசு ஷஹீத் சுஹ்ரவர்தி கல்லூரி மற்றும் கபி நஸ்ருல் அரசு கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டம் மற்றும் வன்முறை ஆகும். இந்த செய்தியை வங்கதேச செய்தி சேனல் வெளியிட்ட வீடியோவின் லிங்க் மற்றும் ஸ்கிரீன்ஷாட் இதோ .
மேலும், நடத்திய விசாரணையின் பிடிஐ டெஸ்க் கூகுளில் முக்கிய வார்த்தை தேடலை நடத்தியது இதன்மூலம் பல செய்தி அறிக்கைகளைக் காண முடிந்தது. நவம்பர் 25, 2024 அன்று வங்கதேசத்தை தளமாகக் கொண்ட செய்தி இணையதளமான தி டெய்லி ஸ்டார் வெளியிட்ட செய்தி அறிக்கையின்படி, இந்த சம்பவம் அரசு ஷாஹீத் சுஹ்ரவர்தி கல்லூரி, கபி நஸ்ருல் அரசு கல்லூரி மற்றும் டாக்டர் மஹ்புபூர் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை மோதலாகும். பல மணிநேர வன்முறையில் சுமார் 100 பேர் காயமடைந்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வங்கதேசத்தை தளமாகக் கொண்ட ஒரு நாளிதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரையின் இணைப்பு மற்றும் ஸ்கிரீன்ஷாட் இதோ .
வங்கதேசத்தில் இந்து மாணவர் ஒருவர் தெருக்களில் அடித்துக் கொல்லப்பட்டதாக வீடியோவில் பரப்பப்பட்ட கூற்று தவறானது என்று டெஸ்க் முடிவு செய்தது. வீடியோவில் பரப்பப்படும் சம்பவம் கடந்த மாத தொடக்கத்தில் மற்றொரு நபரின் மரணம் தொடர்பாக மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட வன்முறை மோதலாகும்.
முடிவுரை
வங்கதேசத்தில் இந்து மாணவர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது தவறானது. மூன்று கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர் குழுக்களுக்கு இடையேயான வன்முறை மோதலின் வைரலான வீடியோ ஒரு வகுப்புவாத கோணத்துடன் தவறாக பரப்பப்பட்டு வருகிறது. இதனை பிடிஐ உண்மை சரிபார்ப்பு டெஸ்க் உறுதிப்படுத்தியுள்ளது.
Note : This story was originally published by ‘PTI’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.