பெண்ணைத் தாக்கிய வீடியோ வைரல் - அமரிக்க கோடீஸ்வரர் போலீஸில் சரண்!
அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரரும் வங்கியாளருமான ஜோனாதனன் கேய் பெண் ஒருவரை தாக்கிய வீடியோ வைரலான நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு போலிசில் சரணடைந்தார்.
சில தினங்களுக்கு அமெரிக்காவின் புரூக்ளினில் நடைபெற்ற சுயமரியாதைப் பேரணியில் பெண் ஒருவர் தாக்கப்பட்டார். ஜூன் 8 அன்று நடைபெற்ற இந்த சம்பவத்தில் பெண்ணை அவரது முகத்தில் குத்துவிடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நபர் மீது 38வயதான பெண் ஒருவர் நியூயார்க் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதில் தனது மூக்கு உடைக்கப்பட்டு தனது கண்கள் வீக்கம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். பெண்ணின் மீது தாக்குதல் நடத்திய வீடியோ வைரலான நிலையில் ஜோனாதனன் கேய் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு போலீஸில் சரணடைந்துள்ளார்.
இவர் நியூயார்க் காவல்துறையில் சரணடையும்போது யாருக்கும் தெரியாத வகையில் இருக்க காவல்துறை அலுவலகத்தின் 78வது வளாகத்தில் வரும்போது முகமூடியுடன் கூடிய பழுப்பு நிற ஜாக்கெட் மற்றும் பேண்ட்டை அணிந்து கொண்டு வந்ததாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.