Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வேலூரில் முஸ்லிம்கள் காவலரைத் தாக்கியதாக வைரலாகும் வீடியோ - உண்மை என்ன?

தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் முஸ்லிம்களில் ஒரு குழு காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக வீடியோ வைரலாகிறது
06:00 PM Mar 26, 2025 IST | Web Editor
featuredImage featuredImage
Advertisement

This News Fact Checked by  ‘NEWS METER’

Advertisement

வெள்ளைத் தொப்பி அணிந்த ஆண்கள் ஒரு காவல்துறை அதிகாரியுடன் வாக்குவாதம் செய்து, அவரது தொலைபேசியைப் பறிக்க முயற்சிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் முஸ்லிம்களில் ஒரு குழு காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக இந்த வீடியோவைப் பகிர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

ஒரு X பயனர் இந்த காணொலியைப் பகிர்ந்து தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் காவல்துறையின் நிலைமை இதுதான் " என்று எழுதினார்.  இதே போன்ற ஒரு பதிவை இங்கே காணலாம்.

உண்மை சரிபார்ப்பு:

இந்தக் கூற்று தவறானது என்று நியூஸ்மீட்டர் கண்டறிந்துள்ளது. இந்தக் காணொலி 2019 ஆம் ஆண்டு வெளியானது. வைரல் வீடியோவை சரிபார்க்க கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் மேற்கொண்டபோது பிப்ரவரி 2019 இல் பாஜக ஒசூர் மற்றும் பாண்டி மாவட்ட நிர்வாகி என்ற பெயர்களைக் கொண்ட சமூக வலைதள கணக்குகள் ஒரே வீடியோவைப் பகிர்வதைக் கண்டோம்.

மேலும், இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பிப்ரவரி 27, 2025 அன்று தங்கள் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்ட விளக்கத்தைக் கண்டோம் அதில் :

"வாணியம்பாடி நகர காவல் நிலைய துணை ஆய்வாளருடன் மக்கள் மோதலில் ஈடுபடுவதைக் காணக்கூடிய ஒரு காணொலி சமூக ஊடக தளங்களில் பகிரப்படுகிறது. இந்த சம்பவம் 2019 ஆம் ஆண்டு நடந்தது, மேலும் இந்த சம்பவம் சமீபத்தில் நடந்ததாகக் கூறி மக்கள் வீடியோவைப் பரப்பி வருகின்றனர்" என பதிவிட்டனர். எனவே இந்த காணொலி பழையது என்பதை உறுதிப்படுத்தியது.

வேலூர் மாவட்டம் வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை என மூன்றாகப் பிரிக்கப்பட்டது, அப்போதைய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகஸ்ட் 2019 இல் சுதந்திர தின விழாவின் போது இதை அறிவித்தார். நவம்பர் 28, 2019 அன்று, இதன் மூலம் திருப்பத்தூர் தமிழ்நாட்டின் 35வது மாவட்டமாக மாறியது.

வைரலாகும் கூற்றுகளில் உள்ள தலைப்பில், இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் நடந்ததாகக் கூறப்பட்டது இருப்பினும், மூன்றாகப் பிரிக்கப்பட்ட பிறகு, வாணியம்பாடி திருப்பத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது. மேலும், இந்த சம்பவம் 2019 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (AIADMK) ஆட்சியின் கீழ் நடந்தது.
எனவே, இந்தக் கூற்று தவறானது என்று நியூஸ்மீட்டர் முடிவு செய்கிறது.

This story was originally published by  ‘NEWS METER’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
முஸ்லிம்கள்காவல்துறை_வாக்குவாதம்தமிழ்நாடு_செய்திகள்தவறான_கூற்றுபழைய_வீடியோபகிர்வு_குறித்த_எச்சரிக்கைசமூக_ஊடகங்கள்வேலூர்_மாவட்டம்வீடியோ_உண்மை_சரிபார்ப்புவாணியம்பாடிMuslimsvellore
Advertisement