37 தொகுதிகளில் வெற்றி - நாட்டின் 3வது பெரிய கட்சியாக உருவெடுத்த சமாஜ்வாதி கட்சி!
37 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் நாட்டின் 3வது பெரிய கட்சியாக சமாஜ்வாதி கட்சி உருவெடுத்துள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.
மத்தியில் பெரும்பான்மையை நிருபித்து ஆட்சி அமைக்க 272 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 543 தொகுதிகளில், 292 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. இதில் பாஜக 239 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், இந்தியா கூட்டணி 234 தொகுதிகளிலும் அவற்றில் சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
இந்த நிலையில் மக்களவை தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 37 இடங்களில் வெற்றிபெற்றது. இதன் மூலம் பாஜக , காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக சமாஜ்வாதி கட்சி 3வது இடத்தில் உள்ளன. பாஜகவின் கோட்டையாக கருதப்பட்ட உத்தரப்பிரதேசத்தில் அதிக இடங்களை வென்றதன் மூலம், சமாஜ்வாதி கட்சி அகில இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளது.