Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வசூலில் மாஸ் காட்டும் #Vettaiyan... 4 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

07:00 PM Oct 14, 2024 IST | Web Editor
Advertisement

‘வேட்டையன்’ திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகளவில் ரூ. 240 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மஞ்சு வாரியர், ராணா, ஃபஹத் பாசில், அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் ஆயுத பூஜை விடுமுறை தினங்களை முன்னிட்டு கடந்த அக்.10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. என்கவுன்ட்டர் குறித்து பேசியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்: புதிய பயணத்திற்கு தயாரான #Kamalhaasan… வைரலாகும் நியூ லுக்!

https://twitter.com/LycaProductions/status/1845796753481638140

முன்னதாக இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த மனசிலாயோ, ஹண்டர் வன்ட்டார் ஆகிய பாடல்கள் வெளியாகி இன்றளவும் டிரெண்டிங்கில் உள்ளது. இத்திரைப்படம் வெளியான முதல் நாள் உலக அளவில் ரூ.65 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இத்திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகளவில் ரூ. 240 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tags :
actor rajinikanthanirudhbox officecinemaLycamovienews7 tamilRajiniRajinikanthThalaivarVettaiyan
Advertisement
Next Article