Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#TVK: நாளை முதல் நாடெங்கும்...அறிமுகமாகிறது கட்சிக் கொடி!

04:29 PM Aug 21, 2024 IST | Web Editor
Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி நாளை அறிமுகமாகும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

Advertisement

2026 சட்டப் பேரவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் செப். 22-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான ஆயத்த பணிகளில் விஜய், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடி நாளை காலை 9.15 மணிக்கு சென்னையை அடுத்த பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே,

சரித்திரத்தின் புதிய திசையாகவும், புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும், இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22.

நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு, கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன்.

நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்.

இவ்வாறு தவெக தலைவர் விஜய் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
தமிழக வெற்றிக் கழகம்flagtvkTVK Vijay
Advertisement
Next Article