"கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் விரைவில் தீர்ப்பு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் உதகைக்கு சென்றார். இந்நிலையில் இன்று காலை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி மைதானத்தில் நடை பயிற்சி மேற்கொண்டும், அங்கு பயிற்சி மேற்கொண்டிருந்த மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "உதகையில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் விளையாட்டு துறையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். அதிமுக ஆட்சியில் யார் விளையாட்டுத்துறை அமைச்சர் என்று யாருக்கும் தெரியாது, தற்போது யார் விளையாட்டுத்துறை அமைச்சர் என்பது உங்களுக்கு தெளிவாக தெரியும்.
தற்பொழுது விளையாட்டு துறை அமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் வெளிநாட்டு வீரர்கள் கூட தமிழகத்தில் வந்து பயிற்சி பெற்ற செல்கிறார்கள். நீலகிரி மாவட்டத்திற்கு அரசு நிகழ்ச்சிகள் கலந்து கொள்வது மட்டுமல்லாமல் இதுபோன்ற நடைபயிற்சி மேற்கொண்டும், மக்களையும் சந்தித்து வருகிறேன்.
கடந்த 2019 மக்களவை தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் யார் குற்றவாளியாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று பிரச்சாரம் செய்தேன். அதுபோலவே தற்பொழுது தீர்ப்பு வந்துள்ளது. சட்டமன்ற கூட்டத்தில் கூட கடந்த அதிமுக ஆட்சிக்கு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையே சாட்சி என்று கூறியிருந்தேன் அது தற்பொழுது நிகழ்ந்துள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் இதேபோல தீர்ப்பு விரைவில் வரும் என்றும். எடப்பாடி பழனிச்சாமி அம்ஷாவை சந்தித்தார் அது ஏன் என்று உங்களுக்கே தெரியும். 100 நாள் வேலைத்திட்டமும், மெட்ரோ ரயில் திட்டமும் தான் கொண்டு வந்தேன் என்று எடப்பாடி பனிசாமி பொய் பித்தலாட்டம் கூறி வருகிறார்.
ஆபரேஷன் சிந்தூர் பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ராணுவ வீரர்களை தரக்குறைவாக பேசிய பேச்சு செல்லூர் ராஜூ ஒரு கோமாளி என்றும் அது பற்றி தான் பேச விரும்பவில்லை. ஆப்ரேசன் சிந்தூர் சிறப்பாக இருந்தது அதற்காகத்தான் நான் ஆதரவு தெரிவித்து சென்னையில் பேரணி நடத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.