பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே.13ஆம் தேதி தீர்ப்பு!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 13 ஆம் தேதி கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
06:02 PM Apr 28, 2025 IST
|
Web Editor
Advertisement
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
Advertisement
இந்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரன்பால், பாபு மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த ஒரு மாதமாக இறுதி கட்ட விசரணையானது நடைபெற்று வந்தது. இந்நிலையில் சாட்சி விசாரணைகள் முடிவடைந்த நிலையில் வழக்கில் வரும் 13ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என மகிளா நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி அறிவித்துள்ளார்.
Next Article