இலவச சன்ஸ்கிரீன் வழங்கும் வென்டிங் மெஷின்கள்!
'டீகன்ஸ்ட்ரக்ட் ஸ்கின்கேர்' நிறுவனம் பொது இடங்களில் சன்ஸ்கிரீன் வென்டிங் மெஷின்களை நிறுவி, மக்களுக்கு இலவச சன்ஸ்கிரீனை வழங்குகிறது.
கடுமையான சூரியக் கதிர்களில் இருந்து நம் சருமத்தைப் பாதுகாக்க ஒவ்வொரு நாளும் தவறாமல் முகம் மற்றும் தோலுக்கு சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது அவசியம். அலுவலகத்திற்கு உள்ளேயே பணி செய்வது போன்று இருந்தால் ஒரு முறை சன்ஸ்கிரீன் பயன்படுத்தினால் போதுமானது. ஆனால் வெயிலில் செல்வது போன்று இருந்தால் 2 அல்லது 3 மணி நேரத்திற்கு ஒருமுறை சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். புற ஊதா கதிர்களால் தோல் புற்றுநோய் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
அதிக நேரம் வெயிலில் செல்பவர்கள் தேவைப்படும்போது சன்ஸ்கீரினை பயன்படுத்தும் விதமாக 'டீகன்ஸ்ட்ரக்ட் ஸ்கின்கேர்' நிறுவனம் புது முயற்சியை கையாண்டுள்ளது. கர்நாடகாவை தலைமையிடமாக கொண்ட 'டீகன்ஸ்ட்ரக்ட் ஸ்கின்கேர்' நிறுவனம் இந்தியாவில் பல பகுதிகளில் பொது இடங்களில் சன்ஸ்கிரீன் வென்டிங் மெஷின்களை நிறுவி, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பதற்கும் இலவச சன்ஸ்கிரீனை வழங்குகிறது. இந்த இயந்திரங்களில் வைரஸ் ஜெல் சன்ஸ்கிரீன்கள் வைக்கப்பட்டுள்ளன.