Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Vegetables விலை திடீர் குறைவு! இன்றைய நிலவரம் என்ன?

10:26 AM Sep 03, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை கோயம்பேடு சந்தையில் அதிகவரத்துக் காரணமாக காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.

Advertisement

பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னையின் மிகப்பெரிய காய்கறி சந்தையான கோயம்பேட்டிற்கு காய்கறிகள் தினமும் வருகின்றன. காய்கறி விளைச்சல் மற்றும் வரத்தைப் பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அந்த வகையில் கடந்த  சில நாட்களாக காய்கறி விலையானது குறைந்து வருகிறது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 40 முதல் 55 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 முதல் 75 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 10 முதல் 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 முதல் 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 முதல் 45 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வாழைப்பூ 25 முதல் 30 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 முதல் 35 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 முதல் 70 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 60 முதல் 80 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

காலிஃப்ளவர் ஒன்று 20 முதல் 95 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 30 முதல் 35 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 25 முதல் 30 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 70 முதல் 90 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.

இஞ்சி ஒரு கிலோ 120 முதல் 140 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 180 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 30 முதல் 35 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
ChennaiPrice Dropvegetables
Advertisement
Next Article