Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மே.28-ல் வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும்.. நிர்வாகம் அறிவிப்பு!

07:21 PM May 25, 2024 IST | Web Editor
featuredImage featuredImage
Advertisement

கோடை விடுமுறையை முன்னிட்டு மே 28-ம் தேதி செவ்வாய் கிழமையன்று வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

கோடை விடுமுறை தொடங்கியதிலிருந்து மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களுக்கும், கோயில்களுக்கும் படையெடுத்து வருகின்றனர். இதனால் அனைத்து சுற்றுலா தளங்கள், கோயில்கள் என அனைத்து பொதுத்தளங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது.

இந்நிலையில் மக்களின் வருகையையொட்டி வரும் செவ்வாய் கிழமையன்று வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது;

வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிக்காக வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் பூங்காவுக்கு வருகை தந்து வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகையையொட்டி செவ்வாய்க்கிழமை (மே.28) அன்று வழக்கம் போல் பூங்கா திறந்திருக்கும். வழக்கமான நேரத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.  பார்வையாளர்கள் நெகிழி பொருள்களை எடுத்துவர வேண்டாம் என்று பூங்கா நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Tags :
ChennaiPark ManagementTouristsVandalur Zoo
Advertisement