Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜூலையில் ‘வணங்கான்’ - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

10:35 AM Jun 01, 2024 IST | Web Editor
Advertisement

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

Advertisement

சேது,  நந்தா,  பிதாமகன்,  நான் கடவுள்,  அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா தற்போது ‘வணங்கான்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.  அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில்,  ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.  மேலும், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு  ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  இப்படத்தின் போஸ்டர்,  டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.  தற்போது படப்பிடிப்பு முடிந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில் படம் வரும் ஜூலை மாதம் திரைக்கு வர உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

முன்னதாக ‘வணங்கான்’ படத்தில் சூர்யா நடிக்க முடிவு செய்து,  படத்திற்கான படப்பிடிப்பும் நடந்தது.  அப்போது இந்த படத்தை 2டி நிறுவனம் சார்பில் சூர்யாவே தயாரித்து வந்தார்.  பிறகு,  இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக சூர்யா மற்றும் 2டி நிறுவனம் அறிவித்தது.

Tags :
Arun VijayB StudiosBalaGV PrakashReleaseVanangaanVHouse Productions
Advertisement
Next Article