உத்தரகாண்டில் வேன் கவிழ்ந்து விபத்து: 8 பேர்உயிரிழப்பு!
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் - பத்ரிநாத் சாலையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பக்தர்கள் உயிரிழந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் - பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் 17 பயணிகளுடன் டெம்போ வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது ருத்ர பிரயாக் பகுதியில் சென்று கொண்டிருந்த போது வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அருகில் இருந்தவர்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் வேனில் பயணித்த 7 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 10 பேரை மீட்பு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். வாகனம் பள்ளத்தில் உருண்டு வந்த போது வாகனத்தில் இடுபாடுகளில் சிக்கி அவர்கள் உயிரிழந்ததாக மீட்பு பணியில் ஈடுபட்ட மாநில பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்தனர்.