Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நியூயார்க் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் | ஒரு தோல்வி கூட சந்திக்காமல் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய வைஷாலி!

05:04 PM Dec 31, 2024 IST | Web Editor
Advertisement

உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழகத்தை சேர்ந்த வைஷாலி ஒரு தோல்வி கூட சந்திக்காமல் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Advertisement

2024-ஆம் ஆண்டு FIDE உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப், தொடர் நியூ யார்க்கில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீராங்கனையான ரமேஷ்பாபு வைஷாலி முதலிடம் பெற்றுள்ளார். 23 வயதே ஆன வைஷாலி 8 சுற்றுகள் முடிவில் ஒரு தோல்வியை கூட காணாமல் 11-க்கு 9.5 புள்ளிகளை பெற்று அசத்தியுள்ளார்.

இதன் மூலம் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ள வைஷாலி, அந்த சுற்றில் ஹீ ஜினர்-ஐ எதிற்க்கொண்டு விளையாட இருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உண்மையில் நான் என்னை சிறந்த பிலிட்ஸ் வீராங்கனையாக நினைக்கவில்லை. என்னைவிட மிகவும் கடினமானவர்கள் இங்கு விளையாடுகின்றனர். இன்றைக்கு நடந்த போட்டிகளில் எனக்கு அதிர்ஷ்டம் இருந்ததாகவே நினைக்கிறேன், அது அப்படியே நடந்துவிட்டது." என்று தெரிவித்தார்.

Tags :
FIDE chessNews7Tamilnews7TamilUpdatesVaishali Rameshbabuzhu jiner
Advertisement
Next Article