Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கமுதி அருகே பாதாள பேச்சியம்மன் கோயில் வைகாசி பொங்கல் உற்சவ விழா - 1008 கிலோ ஆட்டிறைச்சி சமைத்து பக்தர்களுக்கு அன்னதானம்!

01:57 PM May 18, 2024 IST | Web Editor
Advertisement

கமுதி அருகே பாதாள பேச்சியம்மன் கோயிலில் நடைபெற்ற வைகாசி பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு 1008 கிலோ ஆட்டிறைச்சி சமைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

Advertisement

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இடிச்சியூரணி கிராமத்தில் ஸ்ரீ இருளப்ப சுவாமி பாதாள பேச்சி அம்மன் கோயில் உள்ளது.  இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பொங்கல் உற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.  அந்த வகையில் இக்கோயிலின் வைகாசி பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு பக்தர்கள் சார்பில் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 51 வெள்ளாட்டு கிடாய்களை நள்ளிரவில் பலியிட்டு,  1008 கிலோ ஆட்டுக்கறியை சமைத்து சுவாமிக்கு படையலிட்டு சிறப்பு பூஜை செய்தனர்.

பின்னர் அவை பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.  முன்னதாக அம்மனுக்கு பால்,  தயிர்,  சந்தனம்,  இளநீர்,  பன்னீர்,  விபூதி,  பஞ்சாமிர்தம் என 16 வகையான மூலிகை திரவிய அபிஷேகம் நடைபெற்றது.  பின்னர் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதணை காட்டப்பட்டது.  இவ்விழாவில் கமுதி சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags :
devoteesfestivalKamudiPechiamman Temple
Advertisement
Next Article