வைகாசி மாத பூஜை... சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!
கேரளாவில் உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். கார்த்திகை மாதம் தான் அதிக பக்தர்கள் சென்று திரும்புவார்கள் என்ற போதிலும் மற்ற காலங்களிலும் அங்குக் கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் மட்டுமின்றி ஒவ்வெரு மாத துவக்கத்திலும் 5 நாட்கள் மாதாந்திர பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இதையும் படியுங்கள் : விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ பட ரிலீஸ் ஒத்திவைப்பு… காரணம் என்ன?
அந்த வகையில் வைகாசி மாத பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டது.
தந்திரி கண்டரர் ராஜீவ் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார்
நம்பூதிரி நடையை திறந்து தீபாராதனை காண்பித்தார். அதன் பின்னர் 18-ம் படிக்கு கீழ் பகுதியில் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்பட்டன. ஐப்பன் கோயில் நடை திறக்கப்பட்டதை அடுத்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இன்று சிறப்பு பூஜைகள் இல்லாத நிலையில் நாளை முதல் அதிகாலை 5 மணியளவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் இரவு 10.30 மணியளவில் நடை அடைக்கப்படுகிறது. இந்த சிறப்பு பூஜைகள் வரும் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.