Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வைகாசி மாத பிரதோஷம், பௌர்ணமி - சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை!

09:32 AM May 19, 2024 IST | Web Editor
Advertisement

கோடை மழை தீவிரமடைந்து, அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வரும் நிலையில் சதுரகிரி மலைக்கு செல்ல 5 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

தமிழ்நாட்டில் இந்த வருடம் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைத்தது. பல மாவட்டங்களில் வெயில் சதமடித்தது. மேலும் ஏப்ரல் மாதமே வெப்ப அலை வீசத் தொடங்கியது. இதனையடுத்து கோடை தொடங்கியதிலிருந்து வெயில் உக்கிரம் காட்டியது. இதனிடையே, கோடை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிப்பு வெளியானது. அதேபோல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வந்தது.

தென்மாவட்டங்களில் தலைகாட்டிய மழை கொஞ்சம் கொஞ்சமாக வட மாவட்டங்களை நோக்கி அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில் மழை தற்போது தீவிரமடைந்துள்ளது. பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த கனமழையால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தென்காசியில் பெய்த கனமழை, குற்றாலம் அருவில் கடும் வெள்ள பெருக்கை ஏற்படுத்தியிருந்தது. இதில் 17 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து தென்காசியில் உள்ள அருவிகளில் குளிக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் சதுரகிரி கோயிலுக்கு செல்லவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வைகாசி மாத
பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் அதிகம் செல்லும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வரும் 20 ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.

Tags :
devoteesFull moonPradoshaSathuragiri Hills
Advertisement
Next Article